வீட்டுக்குள் புகுந்த திருடர்கள்.. பிடிக்க முயன்ற ஹாலிவுட் நடிகர் கொலை! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Prasanth Karthick

திங்கள், 27 மே 2024 (18:59 IST)
அமெரிக்காவில் வீட்டுக்குள் நுழைந்த திருடர்களை பிடிக்க முயன்ற ஹாலிவுட் நடிகர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



அமெரிக்காவில் வெளியாகும் ஹாலிவுட் தொலைக்காட்சி தொடர்களில் ஹீரோவாக நடித்து வந்தவர் ஜானி வாக்டர். இவர் இண்டியானாபோலிஸ், மென் ஆப் கரேன், சைபீரியா உள்ளிட்ட பல படங்களிலும் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இவருக்கு அமெரிக்காவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் ஜானி வாக்டரின் லாஸ் எஞ்சலிஸில் உள்ள வீட்டில் இரவில் திருடர்கள் சிலர் புகுந்துள்ளனர். அவர்களை பிடிக்க ஜானி வாக்டர் முயற்சித்தபோது அவர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் வாக்டரை சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் ஜானி வாக்டர் பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்து அமெரிக்க போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பிரபல ஹாலிவுட் நடிகர் திருடர்கள் சிலரால் கொல்லப்பட்ட சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்