என்னது ஆயுர்வேத பீடியா?... மகேஷ் பாபு அளித்த விளக்கம்!

vinoth
செவ்வாய், 16 ஜனவரி 2024 (17:10 IST)
மகேஷ் பாபு நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் சர்காரு வாரிபட்டா. இந்த படம் சரியாக போகாத நிலையில் இப்போது குண்டூர் காரம் என்ற படத்தில் மகேஷ் பாபு நடித்து வருகிறார். இந்த படத்தை அலா வைகுந்தபுரம்லூ படத்தை இயக்கிய திரிவிக்ரம் இயக்கி வருகிறார். தமன் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

ஸ்ரீலீலா, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயராம் ஆகியோர் மற்ற முக்கிய வேடங்களில் நடிக்க, இந்த படம் ஜனவரி 12 ஆம் தேதி சங்கராந்தியை முன்னிட்டு ரிலீஸ் ஆனது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் முதல் நாள் வசூல் அதிரிபுதிரியாக அமைந்துள்ளது.

இரண்டு நாட்களில் சேர்த்து 130 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வருவதால் படத்தின் வசூல் மேலும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மகேஷ் பாபு இந்த படத்தில் அதிக காட்சிகளில் பீடி குடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இதுபற்றி இப்போது மகேஷ் பாபு விளக்கமளித்துள்ளார். அதில் “படத்தில் நான் குடித்தது ஆயுர்வேத பீடி. அது லவங்க இலைகளால் செய்யப்பட்ட ஆயுர்வேத பீடி. ஒரிஜினல் பீடியை பயன்படுத்திய போது எனக்கு தலைவலியே வந்துவிட்டது. பிறகு இந்த லவங்க பீடியை கொடுத்தார்கள். நான் புகை பிடிக்கவும் மாட்டேன். அதை ஊக்கப்படுத்தவும் மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்