மகேஷ் பாபு படத்தில் பூஜா ஹெக்டேவுக்கு பதில் இணைந்த நடிகை!

Webdunia
திங்கள், 26 ஜூன் 2023 (08:59 IST)
மகேஷ் பாபு நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் சர்காரு வாரிபட்டா. இந்த படம் சரியாக போகாத நிலையில் இப்போது குண்டூர் காரம் என்ற படத்தில் மகேஷ் பாபு நடித்து வருகிறார். இந்த படத்தை அலா வைகுந்தபுரம்லூ படத்தை இயக்கிய திரிவிக்ரம் இயக்கி வருகிறார்.

இந்த படம் முடிந்ததும் மகேஷ் பாபு ராஜமௌலி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். குண்டூர் காரம் திரைப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ரீ லீலா மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் ஒப்பந்தம் ஆகியிருந்தனர். ஆனால் படத்தின் ஷூட்டிங் தாமதம் ஆகிக் கொண்டே வருவதால் படத்தில் இருந்து பூஜா ஹெக்டே விலகினார்.

அவருக்கு பதில் சம்யுக்தா நடிக்க உள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் இப்போது மீனாட்சி சௌத்ரி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழில் உருவாகி வரும் கொலை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்