OPEN AI நிறுவனத்தின் சி.இ.ஓ. சாம் ஆல்ட்மன் பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

வெள்ளி, 9 ஜூன் 2023 (10:22 IST)
Chatgpt என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருளை கண்டுபிடித்த OPEN AI  என்ற நிறுவனத்தின் சிஇஓ பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். 
 
Chatgpt மென்பொருளை தயாரித்த OPEN AI  சி.இ.ஓ சாம் ஆல்ட்மென் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார் என்பதும் அவர் ஒரு சில மாநாடுகளில் பங்கேற்று உரை நிகழ்த்தி உள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் OPEN AI  சி.இ.ஓ சாம் ஆல்ட்மேன் இன்று பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு மூலம் இந்தியா மற்றும் டெக்னாலஜி துறை எப்படி பயன்படும் என்பதை குறித்து பிரதமர் மோடியுடன் அவர் ஆலோசித்ததாக கூறப்படுகிறது 
 
 Chatgpt என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உலகில் உள்ள பல ஊழியர்கள் வேலை இழந்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்திய பிரதமரை OPEN AI  சி.இ.ஓ சாம் ஆல்ட்மேன் சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்