மகான் படத்தின் போஸ்டர் ‘சாமி’ படத்தின் காப்பியா?

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (22:03 IST)
விக்ரம் நடித்து முடித்துள்ள மகான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இந்த படத்தின் போஸ்டர் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த சாமி படத்தை போஸ்டர் என நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர் 
 
கடந்த பல ஆண்டுகளுக்கு முன் வெளியான சாமி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதேபோன்று இருப்பதாகவும் அந்த படத்தின் போஸ்டரை காப்பி அடித்து தான் மகான் படத்தில் போஸ்டராக செய்து இருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது 
 
இந்த இரு படங்களையும் போஸ்டர்களையும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து கலாய்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. போஸ்டர் டிசைன் செய்யும்போது இதற்கு முன் இதே மாதிரி போஸ்டர் வந்திருக்கிறதா என்பதை நினைவில் கொள்ளாமல் அவர்கள் இஷ்டத்துக்கு செய்கிறார்களா அல்லது வேண்டுமென்றே காப்பி அடித்து இருக்கிறார்களா என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள மகான் படத்தின் போஸ்டர் விக்ரம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்