காதலருடன் முதல் முதலாக புகைப்படம் வெளியிட்ட மடோன்னா !

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (16:33 IST)
நடிகை மடோனா செபாஸ்டியன் தனது காதலருடனான செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

2015 ஆம் வருடம் வெளியான பிரேமம் திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வெற்றி பெற்றது. அந்த படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகிய மூன்று கதாநாயகிகளும் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி கதாநாயகிகளாக மாறினர்.

மற்ற இரு நடிகைகளை விட மடோன்னா செபாஸ்டியன் தமிழில் அதிகமான படங்களில் நடித்தார். ஆனால் சில ஆண்டுகளாக அவருக்கு பெரிதாக எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இந்நிலையில் சிறு இடைவெளிக்குப் பின்னர் அவர் தனது காதலர் ராபி ஆபிரகாமோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் இடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்