மாறா படம் எனக்குப் பிடிக்கவில்லை… ரசிகரின் கமெண்ட்டுக்கு பாசிட்டிவ் பதில் சொன்ன மாதவன்!

Webdunia
சனி, 16 ஜனவரி 2021 (11:10 IST)
மாறா படம் தனக்குப் பிடிக்கவில்லை என சொன்ன ரசிகருக்கு மாதவன் பதிலளித்துள்ளார்.

மாதவன் மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள மாறா என்ற படமும் தயாராக இருந்ததால் ஓடிடியில் ரிலிஸ் செய்யும் முடிவை தயாரிப்பாளர்கள் எடுத்தனர். இந்த படம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற சார்லி திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஓடிடியில் ரிலீஸானது.

ஆனால் ரிலீஸானது முதலே எதிர்மறை விமர்சனங்களே வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. அதற்கு முக்கியக் காரணம் பலரும் படத்தை ஒரிஜினல் படத்தோடு ஒப்பிடுவதே என சொல்லப்படுகிறது. இந்நிலையில் ரசிகர் ஒருவர் மாதவனின் சமூகவலைதளப் பக்கத்தில் இந்த படம் தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை எனக் கூறி இருந்தார். அவருக்கு பதிலளித்த மாதவன் ‘ அடுத்த முறை உங்களைக் கவரும் விதமான படங்களில் நடிக்கிறேன்’ எனக் கூறி ஆச்சர்யப்படுத்தியுள்ளார். மாதவனின் இந்த அனுகுமுறை சமூகவலைதளங்களில் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்