லிங்குசாமி படத்தில் மாதவன்… பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (15:18 IST)
லிங்குசாமி இயக்கும் புதிய படத்தில் மாதவன் வில்லனாக நடிக்க போவதாக வெளியான செய்தியை அவர் தரப்பு மறுத்தது.

இயக்குனர் லிங்குசாமி தெலுங்கு நடிகர் ராம் பொத்திலேனியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்துக்காக பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் சரிவராத நிலையில் இப்போது லிங்குசாமி படங்களில் கதாநாயகனாக நடித்த மாதவனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரும் சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது மாதவன் அந்த வேடத்தில் நடிக்க வில்லை என சொல்லப்படுகிறது. அவருக்கு பதிலாக நடிகர் ஆதி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது சம்மந்தமாக மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் படி இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஒரு படத்தை இயக்க உள்ளார். அந்த படத்தில் கதாநாயகன் வேடத்தில் நடிக்கதான் மாதவனிடம் பேச்சுவார்த்தை நடந்ததாம். அந்த செய்திதான் தவறாக வதந்தியாக பரவி விட்டது என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்