3 வது ஹிந்தி இந்திப் படத்தில் நடிக்கும் கார்த்தி பட நடிகை !

திங்கள், 14 ஜூன் 2021 (16:07 IST)
கன்னட சினிமாவில் கடந்த 2016 ஆம் ஆண்டுவெளியான கிரிப்பார்ட்டி என்ற படத்தின் மூலம் நடிகையான அறிமுகம் ஆனவர் மந்தனா. இவர் கீதா கோவிந்தம் என்ற படத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களைப் பெற்றார்.

மேலும் தெலுங்கு முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார்.

இந்நிலையில் தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்த சுல்தான் படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கினார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனுடன் இணைந்து புஷ்பா படத்தில் நடித்து வருகிறார்.  அத்துடன், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் குட்பை என்றா படத்திலும், சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிஷன் மஜ்னு போன்ற படங்களிலும் பிஷியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையே பிரபல தயாரிப்பாளார் சாஜித் நதியாட்வாலா தனது புதிய படத்தில் நடிக்க வைக்க ராஷ்மிகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகிறது. இது ராஷ்மிகாவுக்கு 3 வது படம் என்பதால் ராஷிகாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்