அனுஷ்காவின் படத்தை பார்த்து அதிர்ச்சியான கோலி; ட்விட்டரில் கருத்து

Webdunia
வெள்ளி, 2 மார்ச் 2018 (13:27 IST)
பிரோசித் ராய் இயக்கத்தில் அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகியுள்ள பரி (Pari) படம் இன்று வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் ப்ரோசிட் ராய் இயக்கும் படம் `பரி' ஹாரர் படமாக தயாராகிவரும் இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அனுஷ்கா ஷர்மா. மேலும் பரம்ரதா சட்டர்ஜி, ரஜத் கபூர், ரிதபரி சக்ரபர்த்தி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். என்.ஹெச். 10, `பிளவ்ரி' படங்களைத் தொடர்ந்து இந்தப்  படத்தையும் தனது க்ளீன் ஸ்லேட் ஃப்லிம்ஸ் மூலம் தயாரித்திருக்கிறார் அனுஷ்கா. 
 
விராட் கோலியின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்காவின் நடிப்பில் வெளியான பரி படம் குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி தனது  டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். கோலியின் நீண்ட நாள் காதலியான பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை சமீபத்தில் மணந்தார்.
 
இந்நிலையில் ரோசிட் ராய் இயக்கத்தில் அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகியுள்ள படம் பரி. இப்படம் இன்று வெளியாகியுள்ளது. கோலி உடனான  திருமணத்திற்கு பின், அனுஷ்கா நடிப்பில் வெளியாகும் முதல் படம் இதுவாகும். இந்த நிலையில், ‘பரி’ படத்தின் ஸ்பெஷல் ஷோவை கோலி பார்த்துள்ளார்.  பக்கா பேய் படமாக உருவாகியுள்ள இந்தப் படம் குறித்து கோலி தனது டுவிட்டர் மூலம் கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில் பரி படத்தை நேற்று இரவு பார்த்தேன். இதான் என் மனைவியின் சிறந்த படமாக கருதுகிறேன். நீண்ட நாளுக்கு பின் ஒரு சிறந்த படத்தை பார்த்துள்ளேன்,.  கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் அனுஷ்காவை நினைத்தால் பெருமையாக உள்ளது. இவ்வாறு கோலி பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்