47 படங்கள் நடித்தும் டப்பிங் பேசாதது ஏன்? அனுஷ்கா பதில்...

புதன், 14 பிப்ரவரி 2018 (18:05 IST)
நடிகை அனுஷ்கா யோகா பயிற்சியாளராக இருந்து நடிகையானவர். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநயகியாக திகழ்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளை சேர்ந்து அனுஷ்கா 47 படங்களில் நடித்துள்ளார். 
 
நடிகை அனுஷ்கா சினிமாவில் அறிமுகமாகி 12 வருடங்கள் ஆகிவிட்டன. தமிழை விட தெலுங்கு மொழியில் சரளமாக பேசுவார் அனுஷ்கா. ஆனால் அவர் தான் நடித்த எந்தவொரு படத்திற்கும் டப்பிங் பேசியதில்லை. 
 
இதற்கான காரணம் என்னவென அனுஷ்காவே சமீபத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, நான் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு டப்பிங் பேச வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கிறது. ஆனால், எனது தோற்றத்தை விட எனது குரல் சின்னப்பெண் பேசுவது போன்று இருக்கும். 
 
ஆனால், நான் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு கம்பீரமான குரல் தேவை. அப்போது என் குறலில் பேசினால் அனைவரும் கேலி செய்வார்கள். என கேரக்டருக்கும் இது செட் ஆகாது. இதனால்தான் நான் டப்பிங் பேசுவது இல்லை என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்