இந்த தொடரில் எனது தனிப்பட்ட வெற்றிக்கு, எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்களையே காரணமாக கூற முடியும். மிகவும் கடினமான நேரங்களில் எனக்கு தூண்போல இருந்து வலிமையை கொடுத்தவர் எனது மனைவி அனுஷ்கா சர்மா. அவருக்கு எனது நன்றி. இந்த தொடரில் எனது தனிப்பட்ட வெற்றிக்கு அவர்தான் காரணம்.
இந்த வெற்றிக்கு பின் நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இந்த தொடர் முழுவதும் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். டி20 தொடரை எதிர்பார்த்து இருக்கிறோம். இந்த தொடரும், வெற்றியும் முடிந்துவிடவில்லை என தெரிவித்தார்.