தளபதி 67க்காக முதன்முறையாக எல்லை தாண்டும் லோகேஷ்! – எங்கே போறார் தெரியுமா?

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (10:00 IST)
விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகும் ‘தளபதி 67’ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் புதிய லொக்கேஷன்களை பார்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கி பெரும் வெற்றி பெற்ற படம் மாஸ்டர். இந்த படத்திற்கு பின்னர் மீண்டும் விஜய் – லோகேஷ் கூட்டணியில் ‘தளபதி 67’ உருவாக உள்ளது. இதற்கான கதை, திரைக்கதை பணிகள் முடிந்த நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

ஏற்கனவே கைதி, விக்ரம், படங்கள் மூலம் லோகேஷ் ஒரு புது சினிமாட்டிக் யுனிவர்ஸை உருவாக்கியுள்ள நிலையில் அதில் விஜய்யின் ‘தளபதி 67’ம் இணையுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படம் குறித்த தகவல்களும் உள்ளன.

கைதி, விக்ரம், மாஸ்டர் என பெரும்பாலும் தமிழ்நாட்டு எல்லைக்குள்ளேயே சுற்றி வந்த லோகேஷின் கதைகளம் தற்போது இந்திய அளவில் விரிந்திருக்கிறதாம். தளபதி 67 முழுவதும் ஒரு பக்கா ஆக்‌ஷன் ப்ளாஸ்டர் திரைப்படம் என கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக பலர் நடிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங்கை காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடத்த உள்ளாராம் லோகேஷ் கனகராஜ். லோகேஷூக்கு தற்போது தேசிய அளவில் ஒரு டிமாண்ட் எழுந்துள்ளதால் இந்த படம் பல மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாகும் படமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்