அட்லி & விஜய்யுடன் கைகோர்க்கும் சன் பிக்சர்ஸ்… தளபதி 68 பட அப்டேட்!

செவ்வாய், 20 டிசம்பர் 2022 (14:42 IST)
அட்லி இப்போது ஷாருக் கான் நடிக்கும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.

ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அட்லி, அடுத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக ஆனார். அதையடுத்து இப்போது பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த படத்தை முடித்ததும் அவர் மீண்டும் விஜய்யை இயக்க உள்ளாராம். இந்நிலையில் இந்த படத்தை மிக அதிக பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை சில நாட்களுக்கு முன்னர் நடந்து உறுதி செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்