ஹார்மோன் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள முன்னணி நடிகை !

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (20:25 IST)
தமிழ் சினிமாவில் 7 ஆம் அறிவு படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். இப்படத்தை அடுத்து 3, புலி, வேதாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

தற்போது, கேஜிஎப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல்ஸ் பட இயக்குனர் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில், நடிகை ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதில், தனக்கு கருப்பை வீக்கம் மற்றூம் கருப்பையை சுற்றி நீர்க்கட்டி வந்துள்ளதால் இதனால் தான் ஹார்மோன் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்த ஹார்மோன் கோளாறுகளில் இருந்து சரியாக உடற்பயிற்சி செய்தன் மூலம் இதை சரிசெய்ய முற்படுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்