இன்று வெளியான ‘பத்தல பத்தல’ பாடலில் ’ஒன்றியத்தின் தப்பாலே’ கட்!

வெள்ளி, 1 ஜூலை 2022 (19:51 IST)
உலகநாயகன் கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இந்த படம் ரிலீஸ் ஆகும்போது சிங்கிள் பாடலாக பத்தல பத்தல என்ற பாடல் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது 
 
ஆனால் இந்த பாடலில் இடம் பெற்றிருந்த ஒன்றியத்தின் தப்பாலே’  என்ற வார்த்தை மிகப்பெரிய அளவில் சர்ச்சைக்குள்ளானது 
 
ஆனால் இந்த படம் திரையரங்கில் ரிலீஸ் ஆனபோது அந்த வார்த்தை இல்லை என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் பத்தல பத்தல பாடல் வீடியோ இன்று வெளியாகியுள்ள நிலையில் ஒன்றியத்தின் தப்பாலே’ என்ற வார்த்தை மட்டும் தற்போது கட் செய்யப்பட்டுள்ளது 
இது குறித்து விக்ரம் படக்குழுவினர் விளக்கம் அளிப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்