பல்டி அடித்த முன்னணி நடிகை …வைரலாகும் வீடியோ

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (22:08 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை தன்ஷிகா இவர் தற்போது யோகி டா என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் இப்படத்தில் தன்ஷிகா பல்டி அடிப்பது போன்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அரவான், கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தன்ஷிகா. இவர் தற்போது இயக்குநர் கவுதம் கிருஷ்ணா இயக்கிவரும் யோகி டா என்ற படத்தில் நடித்துவருகிறார்.

இப்படத்தில் தன்ஷிகாவுடன் கபீர் சிங், சாயாஜி ஷிண்டே, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர். இப்படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ளது என்பதால் தன்ஷிகாவுக்கு ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளது.

இந்நிலையில் யோகி டா படத்தில் தன்ஷிகா பல்டி அடிப்பது போன்ற காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்