வனிதாவிடம் ரூ.1.25 கோடி கேட்டு மிரட்டும் லட்சுமி ராமகிருஷ்ணன்!

Webdunia
வியாழன், 30 ஜூலை 2020 (09:03 IST)
வனிதா மற்றும் பீட்டர்பால் மூன்றாம் திருமணம் மற்றும் பீட்டர்பால் முதல் மனைவியின் சர்ச்சை ஆகியவை அனைத்து ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து தற்போது இந்த விவகாரம் குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் வனிதா இருவரும் பிரபல இணையதள சேனல் ஒன்றிற்கு அண்மையில் லைவ் பேட்டி கொடுத்தனர்.

பேட்டியின் ஆரம்பத்திலே ஆங்கரை மரியாதை குறைவாக பேசிய வனிதாவை லட்சுமி ராமகிருஷ்ணன் தட்டி கேட்க அவர்களுக்குள் வாக்குவாதம் ஆரம்பித்தது. பின்னர் வனிதா மிகவும் தரம் கெட்ட வார்த்தைகளால் லட்சுமி ராமகிருஷ்ணனை திட்டி  "நீ யாரு மொதல்ல, நீ ஏன் இதுல தலையிடற, உன்ன கிழிச்சு தொங்க விரட்டுருவேன். ஒரு புருஷனை கட்டிக்கிட்டு வாழ்ந்த நீ பெரிய யோக்கியமா...? உன் புருஷன் கேடுகெட்ட வெட்கம் கெட்ட ஜென்மம் என கண்டிப்படி கீழ்த்தரமாக திட்டிவிட்டார் வனிதா.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி காட்டுத்தீ போல் பரவி வனிதாவின் முகத்திரையை கிழித்தது. மேலும், லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பலரும் ஆதரவு குரல் கொடுத்தனர். இதையடுத்து லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அதனை வனிதா தனது ட்விட்டரில் வெளியிட்டு,  

" ஒரு குடும்பத்திற்கு உதவி செய்வது போன்றும், தேவையில்லாமல் என் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டு, அதைச் செய்ய அவருக்கு அதிகாரம் இல்லாதபோது ஒரு போலி நீதிபதியாக செயல்படுவதற்கு என்னிடம் ரூ .1 கோடி 25 லட்சம் கேட்டு  நல்ல மனசுள்ள சமூக ஆர்வலர் தன் வழக்கறிஞர் மூலம் என்னை மிரட்டுவதை பாருங்கள்.. அப்பாவிகளின் ரத்தத்தை குடிக்கிறார். இதை இப்படியே விடப்போவதில்லை இது தொடர்பாக என் வழக்கறிஞர் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளார் என்று பதிவிட்டுள்ளார் வனிதா.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்