அவெஞ்சர்ஸ்கே அடங்காதவர் உங்க பேச்சை கேட்பாரா? – லக்‌ஷ்மி ராம்கிருஷ்ணன் வேண்டுகோளுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்

Webdunia
ஞாயிறு, 23 ஜூன் 2019 (17:12 IST)
விஜய் சேதுபதி நடித்து வெளியாகவிருக்கும் படம் “சிந்துபாத்”. இந்த படத்தை அருண்குமார் இயக்கி இருக்கிறார். இந்த படம் ஜூன் 21 அன்று வெளியாகவிருந்த நிலையில் தயாரிப்பாளர் தரப்பில் பிரச்சினை உண்டானது.

எனவே படத்தின் ரிலீஸ் ஜூன் 28ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஜூன் 28ல் யோகி பாபு நடித்த ”தர்ம பிரபு”, லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள “ஹவுஸ் ஓனர்” போன்ற சிறிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. இந்நிலையில் விஜய் சேதுபதியின் படமும் அதே தேதியில் வெளியானால் சிறிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைக்காது. மேலும் எல்லாரும் விஜய் சேதுபதி படத்துக்கே சென்று விட வாய்ப்பிருப்பதால் இந்த படங்கள் வசூலிலும் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

இதை குறிப்பிட்டு ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க தயாரிப்பாளரை அறிவுறுத்துமாறு லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் ட்விட்டர் மூலமாக விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் சிந்துபாத் பல பிரச்சினைகளுக்கு இடையே வெளியாவதால் ரிலீஸ் தேதியை தள்ளிவைக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் அவெஞ்சர்ஸ் படத்துக்கு விஜய் சேதுபதி டப்பிங் பேசியதை சுட்டிகாட்டிய ரசிகர்கள் சிலர் “அவர் அவெஞ்சர்ஸ்கே அடங்காதவர் உங்க பேச்சையா கேட்பார்” என கூறியுள்ளனர். அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் போது அயன் மேன் கதாப்பாத்திரத்திற்கு விஜய் சேதுபதி டப்பிங் பேசியதும், அதற்கு ரசிகர்கள் பலர் அந்த குரல் செட் ஆகவில்லை குரலை மாற்றுங்கள் விஜய் சேதுபதியிடமே கோரிக்கை வைத்ததும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்