மைக் மோகனுக்கு ஜோடியாகும் குஷ்பு! ஹரா படத்தின் அப்டேட்!

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (14:04 IST)
மைக் மோகன் பல ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கும் படத்துக்கு ஹரா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கன்னடத்தில் இருந்து தமிழ் மொழிக்கு வந்த மோகன் மெல்லிய காதல் படங்களில் நடித்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். 80 களில் அவர் நடித்த பல படங்கள் 175 நாட்களைக் கடந்து ஓடி சாதனைப் படைத்ததால் சில்வர் ஜூப்ளி ஸ்டார் என்ற அடைமொழியோடு வலம் வந்தார். ஆனால் 90 களுக்கு பிறகு அவர் பார்முலா படங்களுக்கு வரவேற்பு இல்லாமல் போனது. அதனால் அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார்.

கடைசியாக அவர் நடித்த சுட்டப்பழம் திரைப்படம் வெளியாகியே 13 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்நிலையில் இப்போது அவர் ஒரு புதுப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துக்கு ஹரா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தாதா 89 படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ இயக்க உள்ளார்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தில் மோகனுக்கு ஜோடியாக நடிக்க குஷ்பு ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இருவரும் பல ஆண்டுகளாக சினிமாவில் இருந்தாலும் இணைந்து நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்