சில்வர் ஜூப்ளி ஸ்டார்…. தன் அடைமொழி டைட்டிலோடு ரி எண்ட்ரி கொடுக்கும் மோகன்!

செவ்வாய், 28 டிசம்பர் 2021 (10:21 IST)
1980 களில் வெள்ளி விழா நாயகன் என்ற அடைமொழியோடு பல வெள்ளி விழா படங்களைக் கொடுத்தவர் மைக் மோகன்.

கன்னடத்தில் இருந்து தமிழ் மொழிக்கு வந்த மோகன் மெல்லிய காதல் படங்களில் நடித்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். 80 களில் அவர் நடித்த பல படங்கள் 175 நாட்களைக் கடந்து ஓடி சாதனைப் படைத்ததால் சில்வர் ஜூப்ளி ஸ்டார் என்ற அடைமொழியோடு வலம் வந்தார். ஆனால் 90 களுக்கு பிறகு அவர் பார்முலா படங்களுக்கு வரவேற்பு இல்லாமல் போனது. அதனால் அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார். கடைசியாக அவர் நடித்த சுட்டப்பழம் திரைப்படம் வெளியாகியே 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்.

இந்நிலையில் இப்போது அவர் ஒரு புதுப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துக்கு சில்வர் ஜூப்ளி ஸ்டார் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தாதா 89 படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ இயக்க உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்