ஒரு ரத்தினத்தை இழந்து நிற்கிறோம்… விஜயகாந்த் மறைவுக்கு குஷ்பு இரங்கல்!

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2023 (10:35 IST)
சில வாரங்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் சில நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் மீண்டும் வீடு திரும்பினார். அதன் பின்னர் நடந்த கட்சி செயற்குழு கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார். கலந்துகொண்டாலும், அவர் அந்த நிகழ்ச்சியில் எதுவும் பேசவில்லை.

இதையடுத்து அவர் நேற்று முன்தினம் மீண்டும் உடல்நலக் குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூச்சு திணறல பிரச்சனை இருப்பதால் வெண்ட்டிலேட்டர் வைக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை இயற்கை எய்தினார்.

அவரது மறைவுக்கு சக திரையுலகக் கலைஞர்களும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அவரோடு பல படங்களில் இணைந்து நடித்த நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு “ஒரு ரத்தனத்தை நாம் இழந்திருக்கிறோம். தங்கம் போன்ற இதயம் கொண்ட மனிதர். அவருக்கு இன்னும் நிறைய கிடைத்திருக்க வேண்டும்.  நம் கேப்டன் இறுதியில் அமைதியில் உறைந்துவிட்டார். அவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்