விஜய் ஆண்டனி - அர்ஜுன் நடிக்கும் ‘கொலைகாரன்’

Webdunia
புதன், 6 ஜூன் 2018 (15:17 IST)
விஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் படத்திற்கு ‘கொலைகாரன்’ எனத் தலைப்பு வைத்துள்ளனர்.

தன்னுடைய படங்களுக்கு வித்தியாசமாகத் தலைப்பு வைப்பவர் விஜய் ஆண்டனி. அதுவும் நெகட்டிவ் தலைப்பு என்று மற்றவர்களால் ஒதுக்கப்படுகிறத் தலைப்புகளைத் தேடித்தேடி வைப்பார். இவர் அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘கொலைகாரன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.

இந்தப் படத்தில், விஜய் ஆண்டனியுடன் இணைந்து அர்ஜுன் நடிக்கிறார். விஜய் ஆண்டனி ஜோடியாக ஆஷிமா நர்வால் நடிக்கிறார். நாசர், சீதா, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஆண்ட்ரூ லூயிஸ் என்ற புதுமுகம் இந்தப் படத்தை இயக்குகிறார்.

விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் ‘காளி’ ரிலீஸானது. கிருத்திகா உதயநிதி இயக்கிய இந்தப் படத்தில், அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா ஆகியோர் நடித்தனர். விஜய் ஆண்டனி இசையமைத்து, இந்தப் படத்தைத் தயாரித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்