தமிழ் மண்ணின் வீரத்தை சொல்லும் கிடா பூசாரி மகுடி

Webdunia
செவ்வாய், 26 ஜனவரி 2016 (16:33 IST)
படத்தின் பெயரைக் கேட்டால் பேய் படம் போலத் தோன்றும். ஆனால், இது தமிழ் மண்ணின் வீரத்தை சொல்லும் படம் என்றார் இயக்குனர் ஜெயக்குமார்.


 
 
விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை, கெட்டுப் போனவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை என்பதை அடிப்படையாக வைத்து இந்தப் படம் தயாராகி வருகிறது. இது கணவன் மனைவிக்கும் பொருந்தும், நண்பர்களுக்கும் பொருந்தும், எதிரிகளுக்கும் பொருந்தும்.
 
கிராமத்துப் பின்னணியில் தயாராகும் இந்தப் படத்தில் புதுமுகங்கள் தமிழ், சந்திரா நடிக்கிறார்கள். படத்தின் இன்னொரு சிறப்பம்சம், இளையராஜா இசையமைக்கிறார். மு.மேத்தா பாடல்கள் எழுதுகிறார்.
 
படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.