பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் மூன்று பாகங்களாக உருவாகும் ராமாயணம் சம்மந்தப்பட்ட படத்தில் ராமன் வேடத்தில் ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் ராவணன் வேடத்தில் கேஜிஎஃப் புகழ் யாஷும் நடிக்க, அனுமன் வேடத்தில் சன்னி தியோலும், சூர்ப்பனகை வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங்கும், கைகேயியாக லாரா தத்தாவும் நடிக்கின்றனர். இந்த படத்தை நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.
இந்த படத்தில் ராவணன் வேடத்தில் நடிக்க யாஷ் 200 கோடி ரூபாய் ஊதியமாகப் பெறவுள்ளதாக சொல்லப்படுகிறது. சம்பளம் என்றால் அவரின் விநியோகப் பங்கையும் சேர்த்து என சொல்லப்படுகிறது.
இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகர்களின் பட்டியலில் ஷாருக் கான், அல்லு அர்ஜுன் மற்றும் விஜய்க்கு அடுத்த படியாக யாஷ் இணைவார். அதுவும் வில்லனாக நடிக்க 200 கோடி ரூபாய் சம்பளம் பெறுவது ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது.