KGF நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா? அட செம அழகா இருக்காங்களே!

Webdunia
புதன், 17 மே 2023 (17:22 IST)
கன்னடத்தில் எடுக்கப்பட்ட கே ஜி எஃப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான கே ஜி எஃப் 1 படம் இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இதனை அடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 வெளியாகி அதுவும் மாபெரும் வெற்றி படைத்தது வரலாற்று சாதனை படைத்தது. 
 
இப்படத்தில் நடித்த நடிகை மாளவிகா அவினாஷ் தற்போது உடல் திடீரென உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்து வந்தார். இதை அறிந்ததும் ரசிகர்கள் அதிர்ச்சியடைத்துவிட்டனர். பின்னர் அவர் நலமாகிவிட்டார். இவர் தமிழில் பைரவா, கைதி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகை மாளவிகா, நடிகர் அவினாஷை 2001 -ம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு "கால்வா" என்ற மகள் உள்ளார். இந்நிலையில் மாளவிகா தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அதில் அவரின் மகளை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி. உங்களுக்கு இவ்வளவு பெரிய மகளா? என கேட்டு வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்