KGF நடிகைக்கு திடீர் உடல் நிலைகுறைவு - தீவிர சிகிச்சையில் வெளியிட்ட வீடியோ!

வியாழன், 13 ஏப்ரல் 2023 (16:58 IST)
கன்னடத்தில் எடுக்கப்பட்ட கே ஜி எஃப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான கே ஜி எஃப் 1 படம் இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இதனை அடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 வெளியாகி அதுவும் மாபெரும் வெற்றி படைத்தது வரலாற்று சாதனை படைத்தது. 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடித்த நடிகை மாளவிகா அவினாஷ் தற்போது உடல் திடீரென உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார். இதை அறிந்ததும் ரசிகர்கள் அதிர்ச்சியடைத்துவிட்டனர். 
 
இந்நிலையில் இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், உங்களுக்கு ஒற்றை தலைவலி இருந்தால் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். மருத்துவமனைக்கு செல்லுங்கள்" என்று அறிவுரை கூறியுள்ளார். இவர் தமிழில் பைரவா, கைதி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்