கே ஜி எஃப் 3 எப்போது வரும்? யாஷ்ஷிடம் கேள்வி எழுப்பிய ஷுப்மன் கில்!

vinoth
வியாழன், 24 அக்டோபர் 2024 (10:24 IST)
கன்னடத்தில் எடுக்கப்பட்ட கே ஜி எஃப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான கே ஜி எஃப் 1 படம் இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 இந்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகி 1000 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்கு மூலமாகவே வசூலித்தது.

இந்நிலையில் இரண்டாம் பாகத்தின் முடிவில், மூன்றாம் பாகத்துக்கான முன்னோட்டம் ஒன்று கொடுக்கப்பட்டு இருந்தது. அதனால் மூன்றாம் பாகம் வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில் கே ஜி எஃப் 3 எப்போது வரும் என்ற கேள்வியை யஷ்ஷிடம் கேட்டிருந்தார். அதற்குப் பதிலளித்த  யஷ் “இப்போது நடித்துக் கொண்டிருக்கும் இரண்டு படங்களையும் முடித்த பின்னர் மூன்றாம் பாகம் கண்டிப்பாக வரும். அதற்கான ஐடியா உள்ளது. அந்த பாகத்தை வைத்து பணம் பார்க்க ஆசையில்லை. ஏனென்றால் மக்கள் ஏற்கனவே நிறையக் கொடுத்து விட்டார்கள்.” எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்