யாஷின் டாக்ஸிக் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்த நயன்தாரா…!

vinoth

புதன், 4 செப்டம்பர் 2024 (11:05 IST)
யாஷ் நடிப்பில் கே ஜி எஃப் 2 ரிலிஸாகி கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போதுதான் யாஷ் தனது அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் என்ற படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

கேவிஎன் ப்ரடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்னர் முதல் பெங்களூருவில் தொடங்கியது. இந்த படத்தில் யாஷின் சகோதரி வேடத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. நயன்தாரா சில பாலிவுட் நடிகைகளும் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்போது ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தற்போது நயன்தாரா இணைந்துள்ளார். படப்பிடிப்புத் தளத்தில் இருக்கும் புகைப்படம் நயன்தாரா இணையத்தில் வெளியிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்