கிளைமேக்ஸை நெருங்கிய கே ஜி எப் 2 – இயக்குனர் பகிர்ந்த புகைப்படம்!

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (16:42 IST)
இந்தியாவே ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் கே ஜி எப் 2 படத்தின் கிளைமேக்ஸ் சண்டைக் காட்சிகளை படமாக்கி வருகிறார் இயக்குனர் நீல் பிரசாந்த்.

எப்போது வரும் என்று இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களால் பெரிது எதிர்பார்க்கப்படும் படமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2ன் புதிய அப்டேட் ஒன்றை அதன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. யஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. 

இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் அதீரா பாத்திரத்தில் சஞ்சய் தத் நடிப்பது உறுதியான நிலையில் அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டு அமெரிக்காவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் இப்போது படப்பிடிப்புகளில் கலந்துகொண்டு வருகிறார்.

இந்நிலையில் இப்போது கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளை இப்போது இயக்குனர் படமாக்கி வருகிறாராம். அது சம்மந்தமான படப்பிடிப்புத் தளப் புகைப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்