புறாக்களுடன் கொஞ்சி விளையாடிய கீர்த்தி சுரேஷ் - கியூட் வீடியோ இதோ!

Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (17:25 IST)
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகையாக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ். 
 
குறிப்பாக 'நடிகையர் திலகம்' படத்தின் வெற்றிக்கு பிறகு இவரை புக் பண்ண பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வருகிறார்கள். விஜய், விக்ரம், சூர்யா,தனுஷ் என்று முன்னணி  தென்னிந்திய நடிகர்கள் அனைவருடனும் நடித்து  முன்னணி நடிகையாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களான பென்குயின் , மிஸ் இந்தியா போன்ற படங்களில் நடித்து சினிமாவில் தனக்கான தனித்துவமான மார்க்கெட்டை உருவாக்கிக்கொண்டார். 
 
இதற்கிடையில் தனது உடல் எடையை பாதியாக குறைத்து படு ஸ்லிம் ஆகிவிட்டார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புறாக்களுடன் கொஞ்சிய விளையாடிய அழகிய வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார்.  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்