மாதவன், சூர்யா பட டிரைலரை பாராட்டிய கீர்த்தி சுரேஷ்!

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (17:44 IST)
மாதவன் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகும் ராக்கெட்ரி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது. இந்நிலையில் நடிகை கீர்த்தி இப்படத்தின் டிரைலர் பாராட்டியுள்ளார்.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கேரக்டரில் மாதவன் நடிக்கும் 'ராக்கெட்டரி' என்ற படம் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.

இந்த படத்தை நடிகர் மாதவனே இயக்கியும் வந்தார். இந்த படத்தின் பணிகள் எல்லாம் முடிந்து இப்போது ரிலிஸுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் மிகப்பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. மாதவன் இப்படத்தில் முதியவராகவும், இளம் வயதினராகவும் நடித்துள்ளார்.  மேலும் அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார் இப்படத்தின் நம்பி நாராயணன் கேரக்டரில் நடித்துள்ள மாதவனை பேட்டிகாண்பதுபோல் பத்திரிக்கையாளர் வேடத்தில் சூர்யா நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் ராக்கெட்ரி படத்தின் டிரைலர் பார்த்துவிட்டு இப்படம் வெற்றியடையும் என  நடிகர் மாதவனுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

மேலும் இப்படத்தின் டிரைலருக்காக காத்திருந்தேன். இப்படம் வெற்றி பெற மாதவனுக்கும், ராக்கெட்ரி படக்குழுவுக்கும் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.


 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்