சூர்யா 40 படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலிஸ் தேதி அறிவிப்பு!

வியாழன், 1 ஏப்ரல் 2021 (17:13 IST)
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இப்போது புதுக்கோட்டையில் நடந்து வருகிறது.

சூர்யாவின் 40 ஆவது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார்.  இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைக்க உள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க முக்கியமானக் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வரும் தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் சன் பிக்சர்ஸின் மற்றொரு தயாரிப்பான தளபதி 65 படத்தின் பூஜை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்