சத்தமில்லாமல் நுழைவது, யுத்தமில்லாமல் அழிப்பது: வைரமுத்துவின் கொரோனா கவிதை

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (13:59 IST)
கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் பலர் வீடியோ மூலம் மக்களுக்கு பல்வேறு விஷயங்களை தெரிவித்து வரும் நிலையில் கவியரசர் வைரமுத்து கொரோனா குறித்து கவிதை ஒன்றை எழுதியுள்ளார். இந்த கவிதைக்கு மெட்டமைத்து பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடியுள்ளார். இந்த பாடல் இதோ: 
 
கரோனா கரோனா கரோனா
அணுவை விடவும் சிறியது
அணுகுண்டை போல் கொடியது
அணுவை விடவும் சிறியது
அணுகுண்டை போல் கொடியது
 
சத்தமில்லாமல் நுழைவது
யுத்தமில்லாமல் அழிப்பது
கரோனா கரோனா கரோனா
 
தொடுதல் வேண்டாம்,
தனிமை கொள்வோம்
தூய்மை என்பதை மதமாய் செய்வோம்
கொஞ்சம் அச்சம் நிறைய அறிவு
இரண்டும் கொள்வோம்
இதையும் வெல்வோம்
 
எத்தனை போர்கள் மனிதன் கண்டான்
அத்தனை போர்களிலும் அவனே வென்றான்
எத்தனை போர்கள் மனிதன் கண்டான்
அத்தனை போர்களிலும் அவனே வென்றான்
கரோனாவையும் கொன்று முடிப்பான்
கொள்ளை நோயை வென்று முடிப்பான்
கரோனாவையும் கொன்று முடிப்பான்
கொள்ளை நோயை வென்று முடிப்பான்
 
நாளை மீள்வாய் தாயகமே
நாளைய உலகின் நாயகமே
கரோனாவையும் கொன்று முடிப்பான்
கொள்ளை நோயை வென்று முடிப்பான்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்