பிரம்மாண்டமாக நடக்கும் கத்ரீனா திருமணம்! – அழைக்கப்படாத முன்னாள் காதலர்கள்!

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (11:27 IST)
பாலிவுட் நடிகை கத்ரீன கெய்ஃபின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் ஜெய்பூரில் பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது.

பாலிவுட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கியமான நடிகையாக இருந்து வருபவர் கத்ரீனா கெய்ஃப். இவருக்கும் நடிகர் விக்கி கவுஷலுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் வரும் 9ம் தேதி ஜெய்பூரில் திருமணம் நடைபெற உள்ளது. அங்குள்ள பிரம்மாண்டமான ரிசார்ட் ஒன்றில் மணமக்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு இரவு அங்கு தங்குவதற்கு ஒரு நபருக்கு தலா ரூ.7 லட்சம் செலவாகிறதாம்.

மணமக்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மற்றொரு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருமண நிகழ்ச்சிகளும் அந்த ரிசார்ட்டிலேயே நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்கு பல திரை பிரபலங்களும் அழைக்கப்பட்டுள்ள நிலையில் கத்ரீனாவின் முன்னாள் காதலர்களான சல்மான்கான் மற்றும் ரன்பீர் கபூர் அழைக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்