வெளியானது சூப்பர் ஹிட் ‘காசேதான் கடவுளடா’ ரீமேக்கின் டீசர் … கலக்கும் யோகி பாபு & சிவா!

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (10:12 IST)
சிவா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ள காசேதான் கடவுளடா திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

ஏவிஎம் தயாரிப்பில் 1972 ஆம் ஆண்டு முத்துராமன் மற்றும் தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் காசேதான் கட்வுளடா. இந்த படம் அப்போது மிகப்பெரிய வெற்றி பெற்றது. இன்று வரை வந்த தமிழ் நகைச்சுவை படங்களில் கல்ட் கிளாசிக்காக உள்ளது. இந்நிலையில் இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் இந்த படம்  மீண்டும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.. இதில் மிர்ச்சி சிவா மற்றும் யோகி பாபு ஆகியோர் முத்துராமன் மற்றும் தேங்காய் சீனிவாசன் கதாபாத்திரத்தில் நடிக்க, மனோரமா கதாபாத்திரத்தில் ஊர்வசி நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு தொடங்கிய படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. அதையடுத்து இப்போது படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்