3வது நாளாக 20,000 தாண்டிய தினசரி பாதிப்புகள்! - இந்தியாவில் கொரோனா!

ஞாயிறு, 24 ஜூலை 2022 (12:04 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் இன்று தினசரி பாதிப்பு 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது.


இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகள் நிலவி வரும் நிலையில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிலிருந்து மக்களை காக்க தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,279 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதால்  மொத்த பாதிப்பு 4 கோடியே 38 லட்சத்து 88 ஆயிரத்து 755 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பால் மேலும் 36 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,26,033 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 18,143 பேர் மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 10 ஆயிரத்து 522 ஆக உயர்ந்தது. தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,52,200 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்