ஷங்கர் படத்தின் கதை என்னுடையது… கார்த்திக் சுப்பராஜ் உதவி இயக்குனர் புகார்!

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (10:30 IST)
இயக்குனர் ஷங்கர் அடுத்து இயக்கும் படத்தின் கதையை எழுதியது கார்த்திக் சுப்பராஜ் என சொல்லப்பட்டது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்க உள்ளார். இந்நிலையில் கியாரா அத்வானி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். லைகா உடனான பிரச்சனைகளை முடித்துவிட்டு ஷங்கர் ராம்சரண் தேஜாவின் படத்தை தற்போது தொடங்க உள்ளார்.

இந்த படத்தின் கதையை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் எழுதி கொடுத்துள்ளாராம். இதுவரை ஷங்கர் படத்துக்கு அவரேதான் கதை எழுதுவார். ஆனால் முதல் முறையாக வேறொருவரின் கதையை அவர் படமாக்க உள்ளார். அதுமட்டுமில்லாமல் இது முழுக்க முழுக்க ஒரு அரசியல் கதை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது கார்த்திக் சுப்பராஜ் உதவியாளரான செல்லமுத்து என்பவர் அந்த கதை தன்னுடையது என தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்தில் புகாரளித்துள்ளார். இது சம்மந்தமாக விரைவாக விசாரணை நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்