நடிப்பு அல்ல, நிஜம்: ‘ஜெய்பீம்’ படத்திற்கு பாராட்டு தெரிவித்த கார்த்தி!

Webdunia
வியாழன், 4 நவம்பர் 2021 (11:54 IST)
சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியான நிலையில் இந்த படத்தை பலரும் பார்த்து பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சூர்யாவின் சகோதரருமான நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ஜெய்பீம் படம் குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டில் கூறியிருப்பதாவது:
 
#ஜெய்பீம் - இதுவரை சொல்லப்படாத சமூக அவலத்தை அக்கறையோடும் அற்பணிப்போடும் திரைக்கு கொண்டு வந்து அந்த பழங்குடி மக்கள் வாழ்வில் இன்று ஒரு மலர்ச்சிக்கு வழி வகுத்த அரிய படைப்பு. திரையில் கண்ட அனைத்து உணர்ச்சிகளும் நிஜம்! நடிப்பு அல்ல! சந்துரு சார்
 
கார்த்தியின் இந்த டுவிட்டுக்கு சூர்யாவின் ரசிகர்கள் தங்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்