மீண்டும் தொடங்கிய கார்த்தி படத்தின் படப்பிடிப்பு!

Webdunia
சனி, 3 அக்டோபர் 2020 (15:41 IST)
கார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் சுல்தான் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடந்து வருகிறது.

நடிகர் கார்த்தி ரெமோ படத்தின் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் "சுல்தான்" படத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்துள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்த தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு ‘சுல்தான் படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு மற்றும் எடிட்டிங் பணிகள் முடிவடைந்துள்ளன.

இந்நிலையில் இப்போது லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சுல்தான் படத்தின் படப்பிடிப்பை சென்னையிலேயே எடுத்து வருகிறது படக்குழு. இன்னும் ஓரிரு நாட்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைய உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்