மீண்டும் கார்த்தியுடன் இணையும் ராஷ்மிகா மந்தனா?

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (16:16 IST)
நடிகை ராஷ்மிகா மந்தனா ஏற்கனவே கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படத்தில் நாயகியாக நடித்த நிலையில் தற்போது மீண்டும் கார்த்தியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கார்த்தி நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தை ராஜூமுருகன் இயக்க உள்ளார் என்பதும் ஜப்பான் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்நிலையில் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாகவும் வில்லனாக புஷ்பா படத்தில் நடித்த சுனில் இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகயிருக்கும் இந்தப் படத்தை அடுத்த ஆண்டு தீபாவளி அன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்