விக்ரம் வெற்றியால் அதிகரித்த கமல் பிஸ்னஸ்… இந்தியன் 2 படத்துக்குக்கு சம்பளம் இவ்வளவா?

சனி, 24 செப்டம்பர் 2022 (15:51 IST)
விக்ரம் வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசனின் சம்பளம் பல மடங்கு அதிகமாகியுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மாதம் தொடங்கி படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதில் கமல்ஹாசன் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் இன்று கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளார். இயக்குனர் ஷங்கரோடு அவர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்காக சமீபத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டது. 

இந்நிலையில் படத்தைப் பற்றிய புது தகவல் தற்போது பரவி வருகிறது. விக்ரம் வெற்றியால் இந்த படத்தில் கமல்ஹாசனின் சம்பளம் பேசப்பட்டதை விட பல மடங்கு அதிகமாகியுள்ளதாம். அதாவது முதலில் பேசப்பட்டதை விட நான்கு மடங்கு அதிகமாக இப்போது சம்பளம் கொடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்