தமிழ் சினிமாவில் தோன்றிய பன்முகத் திறமை கொண்ட கலைஞர்களில் சந்திரபாபு முக்கியமானவர், நடிப்பு, பாடல், நடனம் மற்றும் இயக்கம் என பலத்துறைகளில் சாதித்த அவர் ஒரு கட்டத்தில் பயங்கர வறுமைக்கு ஆளாகி பல கஷ்டங்களை அனுபவித்தார். அதே போல அவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் பல சோகங்களைக் கொண்டது.
எம் ஜி ஆரால் வாழ்ந்த பல தயாரிப்பாளர்கள் உண்டு என சொல்வது போல எம் ஜி ஆரால் வீழ்ந்த ஒரு தயாரிப்பாளராக சந்திரபாபுவை சொல்லலாம். இப்படிப் பட்ட சந்திரபாபுவின் பயோபிக்கை எடுக்கும் ஆசை உள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். மேலும் அப்படி எடுத்தால் அதில் ஹீரோவாக தனுஷைதான் நடிக்க வைக்கப்படுவதாக விருப்பப்படுவதாக கூறியுள்ளார்.