கோகுல் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள காஷ்மோரா படத்தை தீபாவளிக்கு வெளியிடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். தற்போது விஷால் படம் ஒன்றும் தீபாவளியை குறி வைத்துள்ளது.
சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா நடித்துவரும் கத்திச்சண்டை படம் வேகமாக வளர்ந்து வருகிறது. வடிவேலு, சூரி ஆகியோர் நடிக்கின்றனர். வில்லனாக ஜெகபதி பாபு.
இந்தப் படத்தை வேகமாக முடித்து தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதற்கு முன் 2013 -இல் கார்த்திய்ன அலெக்ஸ் பாண்டியனும், விஷாலின் சமர் படமும் பொங்கலுக்கு மோதின. அதில் சமர் தோல்வியும், அலெக்ஸ் பாண்டியன் படுதோல்வியும் அடைந்தன. அந்த அலெக்ஸ் பாண்டியனை இயக்கிய சுராஜ்தான் இப்போது கத்திச்சண்டையையும் இயக்கி வருகிறார்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்