ஏப்ரல் 2 –ல் ரிலீஸான கார்த்தியின் மூன்று படங்கள்… அவரே பகிர்ந்த நெகிழ்ச்சி தகவல்!

Webdunia
சனி, 2 ஏப்ரல் 2022 (17:15 IST)
நடிகர் கார்த்தி இன்று தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

கார்த்தி நடித்த சுல்தான் சமீபத்தில் வெளியான நிலையில் அவருடைய அடுத்த படங்கள் எல்லாம் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் விதமாக உள்ளன. பி எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார், முத்தையா இயக்கத்தில் விருமன் மற்றும் இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் என நடித்து வருகிறார். இதில் சர்தார் தவிர்த்து மற்ற இரு படங்களின் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது.

இந்நிலையில் தற்போது கார்த்தி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு தகவல் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. ஏப்ரல் 2 ஆம் தேதியான இன்று கார்த்தியின் பையா, கொம்பன் மற்றும் சுல்தான் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றி கூறியுள்ள கார்த்தி ‘மூன்று படங்களும் என்னை ரசிகர்களிடம் அதிகமாக நெருங்க வைத்தன’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்