விருமன் நாயகி அதிதி ஷங்கருக்கு திருமணமா? தீயாய்ப் பரவும் தகவல்!

புதன், 30 மார்ச் 2022 (12:40 IST)
இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகளான அதிதி ஷங்கர் தற்போது விருமன் படத்தில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர், மருத்துவப் படிப்பை முடித்திருந்தாலும், நடிப்பில் கால்பதித்துள்ளார். இப்போது கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கும் விருமன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படம் ரிலீஸ் ஆகும் முன்னரே இப்போது அதிதி அடுத்தடுத்து சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது திடீரென அதிதி ஷங்கருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துவருவதாகவும், அது சம்மந்தமான வேலைகளில் அவரின் குடும்பத்தினர் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகிவருகின்றன.
Source வலைப்பேச்சு

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்