ரிலீஸுக்கு முன்பே 25 கோடி ரூபாய் லாபம் பார்த்த கலைப்புலி தாணு!

Webdunia
திங்கள், 15 மார்ச் 2021 (08:53 IST)
கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் தனுஷ் நடித்திருக்கும் கர்ணன் திரைப்படத்தை ரிலீஸுக்கு முன்னரே 25 கோடி ரூபாய் லாபம் வரும் அளவுக்கு பிஸ்னஸ் செய்துள்ளாராம்.

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’ இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி இந்த படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து படத்தின் வியாபாரம் மற்றும் விளம்பரப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சினிமா வியாபார வட்டாரத்தில் இந்த படத்தின் வியாபாரம் பற்றி ஆச்சர்யமான தகவல்களை பேசி வருகின்றனர். தாணு & தனுஷ் கூட்டணியில் உருவான அசுரன் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு உள்ள நிலையில் படத்தை தாணு ரிலீஸுக்கு முன்னரே 25 கோடி ரூபாய் லாபம் வரும் அளவுக்கு வியாபாரம் செய்துள்ளாராம். இது சினிமா உலகினருக்கே மிகப்பெரிய ஆச்சர்யமாக அமைந்துள்ளது.

இத்தனைக்கும் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த எனை நோக்கி பாயும் தோட்டா மற்றும் பட்டாஸ் ஆகிய படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்