தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி இந்த படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான திரெளபதியின் முத்தம் என்ற பாடல் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது.