பிரபாஸ் படத்தில் மீண்டும் பாலிவுட் ஹீரோயின்!

Webdunia
வியாழன், 14 அக்டோபர் 2021 (09:54 IST)
பிரபாஸ் நடிக்கும் புதிய படமான ஸ்பிரிட் படத்தில் கதாநாயகியாக கரீனா கபூர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

’பாகுபலி’ திரைப்படத்தின் மூலம் உலக புகழ் பெற்ற பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் தற்போது ராதேஷ்யாம், சலார், ஆதிபுருஷ் என மூன்று படங்களில் நடித்து வருகிறார். மேலும் அஸ்வின் இயக்கத்தில் இன்னும் டைட்டில் வைக்கப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் பிரபாஸ் நடிக்க உள்ள 25வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு ’ஸ்பிரிட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சந்தீப் ரெட்டி இயக்க உள்ளதாகவும் யூவி மூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க கரீனா கபூர் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே பிரபாஸின் ஒரு படத்தில் தீபிகா படுகோன் நடித்து வருகிறார்.  பேன் இந்தியா கதாநாயகனாகி விட்ட பிரபாஸ் படங்களில் வரிசையாக பாலிவுட் ஹீரோயின்கள் ஒப்பந்தம் ஆகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்