சூரரைப் போற்று வெற்றியால் சூர்யா எடுத்த முடிவு!

Webdunia
வியாழன், 14 அக்டோபர் 2021 (09:48 IST)
தமிழ் சினிமாவில் பயொபிக் படங்கள் அதிகளவில் ரிலீஸாகிக் கொண்டு இருக்கின்றன.

தமிழ் சினிமாவில் இது பயோபிக்களின் காலம் போல. இப்போதுதான் ஜெயலலிதாவின் பயோபிக்கான தலைவி வெளியாகி மரண அடி வாங்கியுள்ளது. அதேபோல பல விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரபலங்களின் பயோபிக்குகள் உருவாக்கத்தில் உள்ளன, ஏற்கனவே சூர்யா சூரரைப் போற்று படத்தில் மேஜர் கோபிநாத் கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த படம் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்ப்போது அவர் மீண்டும் ஒரு பயோபிக்கில் நடிக்க வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் வாடிவாசல் படத்துக்குப் பின்னர் உருவாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இது யாருடைய பயோபிக், இந்த படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்தெல்லாம் விரைவில் தகவல் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்